ADDED : ஏப் 24, 2026 04:33 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு வார்டு களில் 9 நாட்கள் கடந்த நிலையில் குடிநீர் சப்ளை தாமதமாவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நகராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் செண் பகத் தோப்பு பேயனாறு மூலமும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் சப்ளை வாரத்திற்கு ஒருமுறை நடந்து வருகிறது.
இதில் குழாய் உடைப்பு, மின்தடை ஏற்பட்டால் குடி நீர் சப்ளை 10 நாட்கள் வரை தள்ளிப் போகும் நிலை பல ஆண்டு களாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது நகரின் பல்வேறு வார்டு களில் 9 நாட் களைக் கடந்தும் நேற்று வரை குடிநீர் சப்ளை செய்யப்படாத நிலை உள்ளது. இதனால் ஒரு குடம் குடிநீர் ரூ. 12 கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.
குறைந்தபட்சம் 6 நாட்களுக்கு ஒரு முறையாவது சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது தாமிரபரணியில் தண்ணீர் குறைந்துள்ள தாலும், இரு நாட்கள் முன்பு வழித்தட பாதையில் குழாய் உடைப்பு ஏற்பட்டதாலும் நகருக்கு குடிநீர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது சரி செய்யும் பணி நடந்து வருவதால் ஓரிரு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான கூடிய சப்ளை துவங்கும் என நகராட்சி கமிஷனர் குமார் கூறினார்.
