/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

ADDED : செப் 17, 2025 12:44 AM
சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரக்கோரி டி.எஸ்.பி., பாஸ்கரிடம் மனு அளித்தனர்.
சிவகாசி அருகே ஆண்டியாபுரம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஜூலை 21 ல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் 50, மகன் கார்த்திகை செல்வன் 25, லட்சுமி 45, சங்கீதா 43 ஆகிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடும், இறுதி சடங்கு செலவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரக்கோரி சிவகாசி டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது டி.எஸ்.பி., பாஸ்கர் காரில் வெளியே சென்றார். காரை வழிமறித்து உறவினர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை பெறும் போது ரூ.5.5 லட்சம் இழப்பீடும், நீதிமன்றம் மூலம் ரூ.10 லட்சம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததை அடுத்து, உடலை பெற்றுக் கொண்டோம்.
இந்த வழக்கில் நிவாரண தொகை வழங்காததால் மாவட்ட நீதிமன்றம், உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கவில்லை. இதனால் வாக்குறுதி அளித்த படி ரூ.10 லட்சம் நிவாரண தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.