
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நெசவாளர்களுக்கு வங்கி மூலம் வழங்கப்படும் கூலியை ரத்து செய்து நேரடியாக வழங்கவும், தரமான நூல் வழங்கிடவும், 4 ஆண்டாக உயர்த்தப்படாத கூலியை உயர்த்தவும், ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. சந்திர பிரபா முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் செந்தில் வேல் பழனி, மாரியம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், கந்தசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள், திரளான நெசவாளர்கள் பங்கேற்றனர்.

