ADDED : ஜன 30, 2025 05:00 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு கமிஷனர் சுகந்தியின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாலா பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் மாநில செயலாளர் டேவிட், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, செயலாளர் கருப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.
