நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் சங்கத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி பேசினார். தாலுகா செயலாளர் கோவிந்தன், இந்திய கம்யூன., நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் பேசினார். இ.கம்யூ., நிர்வாகிகள் மூர்த்தி, பலவேசம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

