நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் முன்பு கனிம வள திருட்டு சம்பவத்தில் சாத்துார் தாசில்தார் உட்பட ஏழு வருவாய்த்துறை அலுவலர்களை கலெக்டர் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெள்ளை பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் பலவேசம் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் கார்த்திகேயன், வட்டார தலைவர்கள் வெம்பக்கோட்டை செந்தில்குமார், சாத்துார் பாண்டி, பேசினர். விருதுநகர் சாத்துார் வெம்பக்கோட்டை உள்ளிட்ட தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

