ADDED : செப் 25, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் முக்குராந்தலில் மத்திய மாநிலஅரசுகளை கண்டித்து சி.ஐ.டி.யு. சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
சாலை போக்குவரத்து மாவட்டதலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகரசெயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் ஆன்லைன் அபராதத்தால் ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்களை முடக்குவதாக கூறியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கார் ஓட்டுநர்கள் வேன் ஓட்டுநர்கள் சி.ஐ.டி.யு.சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.