
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் பணிவரையறையுடன் கூடிய பணி நிரந்தர ஆணையினை வழங்க வேண்டும்.
பணி ஓய்வு, 2022 ஜூலை 1 பிறகு இறந்த பணியாளர்களின் பணப்பலனும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க ஒன்றியத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பல அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.