
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாக கிளை செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் ராஜகோபால், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் உலகநாதன், வருவாய்த்துறை அலவலர் சங்க ராஜ்குமார், கிராம உதவியாளர் சங்க பாலசுப்பிரமணியன் பேசினர். மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.

