நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமல்படுத்த கோரி சென்னையில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர் சங்க தலைவர் கதிரேசன், செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

