
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் டெங்கு மஸ்துார் பணியாளர்களின் பணி நாளை 10 நாட்களாக குறைத்ததை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் கண்ணன் முத்தரசு தலைமை வகித்தார்.
செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், சுகாதாரத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலாளர் லெட்சுமி நாராயணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க செயலாளர் செல்வின், கொசு புழு ஒழிப்பு மஸ்தார் சங்க மாநில நிதி காப்பாளர் சீனிவாசன் பேசினர்.
மாவட்ட பொருளாளர் ராசன் நன்றிக்கூறினார்.

