நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மகளிர் குழு கடனில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க நிர்வாகிகள் கனக லட்சுமி, முத்துமாரி, முத்து நல்லம்மாள் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாண்டிச்செல்வி, குருவம்மாள் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன் பேசினர். திரளான சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.