
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விடுதி துப்புரவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ரூ.15 ஆயிரத்து 700 என்ற காலமுறை ஊதியம் வழங்க கோரி விருதுநகரில் ஆதிதிராவிடர் நலத்துறை அடிப்படை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ், செயலாளர் வைரவன், முன்னாள் துணை தலைவர் கண்ணன் பேசினர்.