நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.பி.அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் பேசினர். நிர்வாகிகள் மூர்த்தி, பலவேசம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வத்திராயிருப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தொழிலாளர் சங்க தலைவர் ராமதாஸ், சின்னத்தம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.