
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; பதிவுரு எழுத்தர் முதல் கூட்டுறவு சார்பதிவாளர் வரை அனைத்து பதவி உயர்வுகளிலும் கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மாரியப்பன் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் விநாயக அரசன் நன்றி கூறினார்.