நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்து பேசினார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டச் செயலாளர் செல்வகணேசன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அழகராஜ், ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.