
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை ஊழியர்கள் மீது திணிக்கக் கூடாது, அதற்கான மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விருதுநகர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச் செயலளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலமுருகன், ஏ.டி.பி., மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் சந்திரபோஸ், நாகராஜன், வேல்முருகன், சேவகன், சுரேஷ்குமார் பேசினர்.

