
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக மாவட்ட ஆட்டோ, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு ஒருங்கிணைப்பு குழு கன்வினர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முத்துராஜ், மாவட்ட செயலாளர் தேவா பேசினர். 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்தி கொடுக்க வேண்டும், ஆட்டோக்களுக்கு 100 கிலோமீட்டர் வரை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

