ADDED : மார் 12, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட முடிவுகளை செயல்படுத்த மறுத்தல் உள்பட 5 அம்ச
கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், மாநில செயலாளர் வினோத் கண்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் சாய் கண்ணன் பங்கேற்றனர்.
