ADDED : ஆக 18, 2026 02:58 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் குறைந்த பட்ச ஓய்வூதிய தொகை ரூ.1000ல் இருந்து ரூ.7500 ஆக உயர்த்தி, அகவிலைப்படி வழங்குவதோடு, ஓய்வூதியதாரர்களை ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் சமுத்திரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் உடல் உழைப்பு சங்க மாவட்ட செயலாளர் ரத்தினசபாபதி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன் தாமரை, பி.எம்.எஸ்., மண்டல பொது செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
