ADDED : ஆக 19, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: ஓய்வூதியர்களைப் பாதிக்கும் வகையில் பென்சன் வேலிடேஷன் 2025 சட்டத்தை இயற்றியதை உடனடியாக ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் வைத்து என்.சி.சி.பி.ஏ, எம்.சி.பி.ஏ ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை விளக்கி அஞ்சல் அலுவலர் சங்கத்தின் சண்முகநாதன், ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்டத் தலைவர் செல்வராஜ், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குருசாமி பேசினர். மேலும் இதில் ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்ட செயலாளர் புளுகாண்டி, மாவட்ட பொருளாளர் பெருமாள்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
