ADDED : ஆக 19, 2026 11:37 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன் பணியிடத்தை 24 மணி நேர பணியாக அறிவித்து பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், காலியாக உள்ள நிலை 2 நுட்பனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் பூமிநாதன், மாநில பொதுச்செயலாளர் பாண்டித்துரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, தி ரேடியோலாஜிக்கல் அசிஸ்ட்ண்ட்ஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் அசோக்குமார், சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
