ADDED : ஆக 22, 2026 11:58 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்கும் நோக்கத்தில் செயல்படும் தலைமை செயலாளர் சாய்குமார், உறுப்பினர்களை கணக்கெடுக்க உத்தரவிட்ட குஜிலியம்பாறை தாசில்தார் அய்யாசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகர செயலாளர் ஜெயபாரத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் குருசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், சுந்தரபாண்டியன், மாரியப்பன், லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
