ADDED : ஆக 27, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் நடந்து வரும் முறைகேடுகளை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., – ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., கன்வீனர் பாலமுருகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட உதவித் தலைவர் சாராள் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சி.பி.எம்., நகரச் செயலாளர் ஜெயபாரத், சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
