ADDED : ஆக 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: பட்ஜெட் கூட்டத்தொடரில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 உடனே அனைவருக்கும் வழங்குவது, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை உயர்த்துவது, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் குருசாமி, சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் மகாலட்சுமி பேசினர்.
