/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வரை 'அப்பா' என அழைத்த குழந்தைகள் இல்லம் அருகே குப்பையால் டெங்கு அபாயம்
/
முதல்வரை 'அப்பா' என அழைத்த குழந்தைகள் இல்லம் அருகே குப்பையால் டெங்கு அபாயம்
முதல்வரை 'அப்பா' என அழைத்த குழந்தைகள் இல்லம் அருகே குப்பையால் டெங்கு அபாயம்
முதல்வரை 'அப்பா' என அழைத்த குழந்தைகள் இல்லம் அருகே குப்பையால் டெங்கு அபாயம்
ADDED : அக் 24, 2025 02:27 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே சூலக்கரை அரசு குழந்தைகள் இல்லம் அருகே பிளாஸ்டிக் குப்பையில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இந்த இல்லத்தில் உள்ள குழந்தைகள் கடந்தாண்டு ஆய்வுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை 'அப்பா' என அழைத்தது குறிப்பிட தக்கது.
விருதுநகர் ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சூலக்கரையில் தாதம்பட்டி செல்லும் ரோட்டில் அரசு குழந்தைகள் இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இந்த இல்லத்திற்கு தமிழக முதல்வர். 2024 நவ. மாதம் திடீர் ஆய்வு செய்த போது மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது இப்பகுதி முழுவதும் குப்பைகளின்றி சுத்தமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது இல்லம் அருகே குப்பை தேங்கி பாடாவதியாய் உள்ளது.
குப்பை வீடுகள் தோறும் வாங்காததால் மக்கள் இல்லம் அருகே உள்ள பள்ளத்தில் குப்பை வீசிச் செல்கின்றனர். ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கின்றன. இதை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தொடர் மழை காரணமாக, பிளாஸ்டிக் குப்பை மீது மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
இவை அருகில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள மாணவிகளை கடித்து டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மாணவிகள் தான் முதல்வரை 'அப்பா 'என அழைத்தவர்கள்.குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகள் இல்லம் அருகே தேங்கிய குப்பையை அகற்ற வேண்டும்.

