/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
19 ஆயிரம் டன் பயோ மைனிங் செய்தும் விருதுநகரில் அடங்காத குப்பை
/
19 ஆயிரம் டன் பயோ மைனிங் செய்தும் விருதுநகரில் அடங்காத குப்பை
19 ஆயிரம் டன் பயோ மைனிங் செய்தும் விருதுநகரில் அடங்காத குப்பை
19 ஆயிரம் டன் பயோ மைனிங் செய்தும் விருதுநகரில் அடங்காத குப்பை
ADDED : செப் 28, 2024 05:06 AM

விருதுநகர் : விருதுநகரில் 19 ஆயிரம் டன் குப்பை பயோ மைனிங் செய்யப்பட்டும், தற்போது வரை கிடங்கில் குப்பை குறையாத சூழல் தான் உள்ளது. பெருகி வரும் வணிக பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
விருதுநகர் நகராட்சி பகுதிகளில் நாள்தோறும் துாய்மை தொழிலாளர்கள் மூலம் நேரடியாக வீடுகளில் குப்பை பெறப்பட்டு வருகிறது.
வீடுகளில் இருந்து பெறும் போதே மக்கும், மட்கா குப்பை என தரம் பிரித்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 உரமாக்கல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாகவும், மட்கா குப்பைகள் மறுசுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.
இத்திட்டம் துவங்கும் முன்பு நகராட்சியின் குப்பை அனைத்தும் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டி ரோடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே உள்ள கிடங்கில் குவிக்கப்படுவது வழக்கம். இந்த குப்பை கழிவுகள் தற்போது அதிகளவில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை பயோ மைனிங் செய்து அகற்ற திட்டமிடப்பட்டு ரூ.1.37 கோடி ஒதுக்கப்பட்டது. 2023 ஜன. 2ல் இத்திட்டம் துவங்கியது. பயோ மைனிங் என்பது உயிர் உயிரினங்கள் அல்லது காற்று, சூரிய ஒளி போன்ற இயற்கை கூறுகளை கொண்டு குப்பையை சுத்திகரிக்கும் செயல்முறை. மொத்தம் 19 ஆயிரம் கியூப் மீட்டர் உள்ளது.
தற்போது முடிவடைந்துள்ளது. ஒரு கியூப் மீட்டருக்கு ஒரு டன் என்றால் 19 ஆயிரம் டன் குப்பை பயோ மைனிங் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது மீண்டும் குப்பை பெருகி வருகிறது. தினசரி மனித பயன்பாடுகளால், வணிக சூழலாலும் அளவிட முடியாத அளவுக்கு குப்பை பெருகி வருகிறது. இவை தவிர நகர்ப்பகுதிகளிலும் அதிகளவில் குப்பை குவிந்து வருகிறது. பயோ மைனிங் என்பது தீர்வாக இருந்தாலும், குப்பை கிடங்கில் இன்னும் குப்பை நிரம்பி தான் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு கண்டு குப்பையை இன்னும் எளிதாக குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்காத பிளாஸ்டிக் குப்பை பயன்பாட்டிற்கு ஈடாக, பாதிப்பில்லாத மக்கும் குப்பையின் பயன்பாட்டை கொண்டு வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.