/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
/
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
ADDED : நவ 01, 2025 05:36 AM
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்வதால் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. நகராட்சி பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமங்களுக்கும் இந்தக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஒரு சில நகராட்சிகளில் தாமிரபரணி குடிநீர் திட்டம் 1, 2 என அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மக்களுக்கு முறையான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து நூற்றுக் கணக்கான கி.மீ., கடந்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது. இவற்றை அந்தந்த ஊர்களில் உள்ள சம்புகள், மேல்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடக்கிறது. கிராமங்களுக்கு வாரத்தில் 2 நாட்களும் நகராட்சி பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் அடிக்கடி குழாய்கள் உடைப்பு, பராமரிப்பு, மின்தடை, ஆற்றில் வெள்ளம் உள்ளிட்ட காரணங்களினால் குடிநீரை முறையாக விநியோகம் செய்ய முடிவது இல்லை. இதனால் மாதத்திற்கு 3 நாட்கள் தான் தண்ணீர் விநியோகம் பல ஊர்களில் நடைபெறுகிறது. கிராம பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. குடிநீர் திட்ட பணிகளை முறையாக பராமரிப்பதில்லை. அடிக்கடி பல பகுதிகளில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களிலும் வாறு கால்களிலும் கலக்கிறது. குடிநீர் வரும் பகிர்மான குழாய்களை தொடர்ந்து கண்காணிக்க தேவையான பணியாளர்கள் இல்லை. கிராமப் பகுதிகளில் குழாய் உடைந்தாலும் அவற்றை தேடி கண்டுபிடித்து சரி செய்ய பல நாட்கள் ஆகி விடுவதால் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.
அருப்புக்கோட்டை நகராட்சியில் வைகை, தாமிரபரணி குடிநீர் 1, 2 என மூன்று திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நகரின் பல பகுதிகளில் குழாய்கள் உடைந்து விடுவதால் அதை கண்டுபிடித்து சரி செய்வதற்கு பல நாட்கள் ஆகிறது. 3 நாட்களுக்கு முன்பு சுக்கிலநத்தம் ரோட்டில் உள்ள நகராட்சி உர கிடங்கு எதிரே தண்ணீர் குழாய் உடைந்து குடிநீர் வயலில் சென்றது. நேற்று முன்தினம் தெற்கு தெரு பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. இதேபோன்று நகரில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறுவதால் குழாய்கள் பதிக்க தோண்டும் பொழுது குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. மேலும் வீடுகளில் குழாய்களில் நள்ளியை மூடுவதில்லை. இதனாலும் குடிநீர் வீணாகிறது.
முறையான பயன்பாடு மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் பின்பற்றி நடந்தால் தான் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினார் போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.--- - - -

