ADDED : மார் 03, 2026 05:28 AM

அ நிறம் | அளவு
சேத்துார்: சேத்துார் அருகே தேவதானம் நற்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் வழியில் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் மாசி மக திருவிழா பிப்.28ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. மாலையில் பிரியாவிடை உடன் நச்சாடைத் தவிர்த்தருளிய சுவாமி, அன்னை தவம் பெற்ற நாயகி சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் உள்ள மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவு 7:00 மணிக்கு மேல் தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்தார். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் செயல் அலுவலர் முருகன் செய்திருந்தனர்.
