ADDED : ஜூன் 27, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளையும், புதிய குடிநீர் தொட்டிகளையும் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ., நிதியில் ரூ.21 லட்சத்தில் சின்ன ஓடைப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கட்டடம், தோட்டிலோவன் பட்டியில் பயணிகள்நிழற்குடை கட்ட அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ரூ.8.75 லட்சத்தில்சங்கராபுரம் பயணிகள் நிழற்குடை, ரூ.33.75 லட்சத்தில் ராவுத்தன் பட்டி, குமாரபுரம் பகுதி குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.