தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி


ADDED : ஜூலை 31, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு:சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் நேற்று பக்தர்கள் மீண்டும் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

ஜூலை 24 ஆடி அமாவாசை நாளான்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்து வருஷநாடு மலை பாதைக்கு செல்லும் மலைப்பாதையில் காட்டுத் தீ ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் அணைத்த போதிலும் மீண்டும் நேற்று முன்தினம் அதிகாலை முதல் காட்டு தீ பற்றி எரிய துவங்கியது. காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் தீயை அணைக்க சிரமம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை தீ முழுமையாக அணைக்கப் பட்டது.

மலைப்பகுதியில் தீயின் புகைமூட்டம் காணப் பட்டதால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் படவில்லை.

நேற்று காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வனத்துறை கேட் மூடப்பட்டது. மலைப் பகுதியை வனத்துறை யினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us