/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உலா வரும் நாய்களால் பக்தர்கள் அச்சம்

ADDED : டிச 08, 2025 05:07 AM
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வளாகத்தில் உலா வரும் தெரு நாய்களால் அச்சமடைந்து வருகின்றனர்.
அவற்றை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொங்கலிட்டும் முடி காணிக்கையும் செலுத்தி கிடா வெட்டி கறி விருந்தும் வைக்கின்றனர்.
இறைச்சி கழிவுகளை உண்பதற்காகவும், எச்சில் இலைகளில் மிஞ்சும் உணவை உண்பதற்காகவும் ஏராளமான தெருநாய்கள் கோயில் வளாகத்தில் விருந்தினர் மண்டபங்கள்,கோயில் பிரகாரங்களில் உலா வருகின்றன.
மாவிளக்கு எடுக்கும் மண்டபத்தில் உலா வரும் நாய்களால் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நாய்கள் கடித்து விடும் அபாயமும் உள்ளது.
எனவே ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோயில் வளாகத்தில் உலா வரும் தெரு நாய்களை பிடித்து அகற்ற வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.