/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதயாத்திரை செல்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அவசியம் -பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
பாதயாத்திரை செல்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அவசியம் -பக்தர்கள் எதிர்பார்ப்பு
பாதயாத்திரை செல்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அவசியம் -பக்தர்கள் எதிர்பார்ப்பு
பாதயாத்திரை செல்பவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அவசியம் -பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 02, 2025 11:57 PM
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் பாத யாத்திரை செல்பவர்களுக்கு ரோட்டில் தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்துார், பழநி, ஐயப்பன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாத யாத்திரை செல்வோருக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
பாதயாத்திரைக்கு குழுவாக செல்லும் பக்தர்கள் இறை நம்பிக்கை அதிகம் உள்ளதால் இது குறித்து அக்கறை கொள்வதில்லை. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பாதயாத்திரையின்போது அசட்டையினாலும்,வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் இவர்கள் கடந்து செல்வது தெரியாமல் மோதி சாலை விபத்துக்கள் உயிரிழப்புகள் நடந்து வருகிறது.
ராஜபாளையத்தில் இருந்து செல்லும் குழுவினர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு இல்லை. உபகரணங்கள் வழங்கினாலும் இதை முறையாக பின்பற்றுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனவே புது பஸ் ஸ்டாண்ட் வழியே செல்லும் திருச்செந்துார், மதுரை வழி செல்லும் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதுடன், ஒளிரும் ஸ்டிக்கர்கள், பட்டைகள் அணிந்து செல்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி எதிர் திசையில் செல்வது போன்ற செயல்களை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

