/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
/
சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 19, 2026 04:32 AM

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நடந்த தை அமாவாசை வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணி வரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களை அர்ச்சகர்கள் செய்தனர். ராஜ அலங்காரத்தில் சுவாமியை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

