தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரியில் தொடரும் மழை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

 சதுரகிரியில் தொடரும் மழை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

 சதுரகிரியில் தொடரும் மழை பக்தர்களுக்கு அனுமதி இல்லை


ADDED : நவ 30, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: மழை பெய்து வருவதால் சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.

சில நாட்களாக சதுரகிரி மலையில் மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் இருந்து அடிவாரம் வரை உள்ள ஓடைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு சில நேரங்களில் குறைவாகவும், சில நேரங்களில் அதிகமாகவும் வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் துவங்கிய சாரல் மழை நேற்று வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்ததால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று காலை கோயிலுக்கு வந்த சில பக்தர்களும் அடிவாரத்தில் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி கோயிலை நோக்கி வணங்கி திரும்பி சென்றனர். வத்திராயிருப்பு வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us