/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கோயிலில் வசதிகளின்றி பக்தர்கள் தவிப்பு
/
ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கோயிலில் வசதிகளின்றி பக்தர்கள் தவிப்பு
ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கோயிலில் வசதிகளின்றி பக்தர்கள் தவிப்பு
ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கோயிலில் வசதிகளின்றி பக்தர்கள் தவிப்பு
ADDED : ஜன 01, 2024 04:57 AM

நரிக்குடி: நரிக்குடி வீரக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கரைமேல் முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் தவித்து வருகின்றனர். தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
நரிக்குடி வீரக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற கரைமேல் முருகன் கோயில் உள்ளது. முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பரம்பரை அறங்காவலர் குழுவின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம், ஆடி வெள்ளி, மகா சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாட்களில் கூட்டம் அலைமோதும். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் எப்போதும் வந்த வண்ணம் இருப்பர். மாசி களரி திருவிழா இங்கு விசேஷமாக நடைபெறும். உள்ளூர், வெளியூர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். பெரும்பாலான பக்தர்களுக்கு குலதெய்வமாக இருந்து வருகிறது.
திருவிழா சமயத்தில் பக்தர்கள் தங்க, உடைமைகளை பாதுகாக்க, கழிப்பறை, குளியல் வசதி என போதிய அடிப்படை வசதிகள் சரிவர கிடையாது. பட்டா நிலத்தில் தற்காலிக பந்தல் அமைத்து தங்குவர். இவ்வாறு தங்கும் போது பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.
மழைக்காலத்தில் பிரகாரத்தைச் சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கும். பக்தர்கள் நடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவர். பக்தர்களின் வருகையை அறிந்து அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
பக்தர்கள் கூறியதாவது: திருவிழா சமயத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வருமானம் பெறுகின்றனர். முடி காணிக்கை ஏலம், உண்டியல் காணிக்கை, பக்தர்களின் காணிக்கை என அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது.
அப்படி இருந்தும் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாதது வேதனையாக உள்ளது. வருமானம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை. ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.