/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடியில் நிழற்குடை வசதியின்றி பக்தர்கள் அவதி
/
இருக்கன்குடியில் நிழற்குடை வசதியின்றி பக்தர்கள் அவதி
இருக்கன்குடியில் நிழற்குடை வசதியின்றி பக்தர்கள் அவதி
இருக்கன்குடியில் நிழற்குடை வசதியின்றி பக்தர்கள் அவதி
ADDED : பிப் 18, 2024 12:46 AM
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடியில் பயணிகள் நிழற்குடை வசதியின்றி பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நென்மேனி சாத்துார் ரோட்டில் உள்ள இருக்கன்குடியில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருக்கன்குடியில் இருந்த இரண்டு பயணிகள் நிழற்குடையும் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதைந்து இடிந்து போயின.
புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படாததால் பழைய பயணிகள் நிழற்குடை இருந்த இடங்கள் திறந்த வெளியாக மாறிவிட்டன .தற்போது தை மாதம் என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பயணிகள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
பயணிகள் மழை பெய்யும் போது இருக்கன்குடியில் உள்ள சேவு மற்றும் டீக்கடைகளில் கூரைகளுக்கு அடியில் நின்று பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக நிழற்குடையும் அமைக்கப்படவில்லை. வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகமும் ஹிந்து சமய அறநிலைத்துறை கோயில் நிர்வாகமும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெற்று வரும் நிலையில் பத்திரங்களுக்கு தேவையான அடிப்படை வசதியான பயணிகள் முதன் முறையை பற்றி தர உள்ளாட்சி நிர்வாகம் முன் வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.