UPDATED : நவ 22, 2026 11:02 PM
ADDED : நவ 22, 2026 08:34 PM

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு, கந்தபுரம் தெரு ரோடு இணையும் இடத்தில் பேவர் பிளாக் ரோடு சேதமாகி மேடும், பள்ளமுமாய் உள்ளதால் வாகன ஓட்டிகள், அருகில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் ராமர் கோயில், பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இதனால் தினமும் காலை, மாலை நேரங்களில் பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இப்பகுதியில் ரயில்வே பீடர் ரோடு, கந்தபுரம் தெரு ரோடு இணையும் இடத்தில் பேவர் பிளாக் கற்கள் ரோடு அமைக்கப்பட்டு முழுமை அடையாமல் உள்ளதால் சேதமானது.
இதனால் டூவீலரில் செல்ல முடியாமல் தினமும் வாகன ஓட்டிகளும், பக்தர்களும் சிரமப்படுகின்றனர். எனவே பேவர் பிளாக் பணியை முழுமைப்படுத்தி ரோடு போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
