/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆங்கில புத்தாண்டு சுவாமி தரிசனம் ஆண்டாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ADDED : ஜன 02, 2024 04:47 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்ட பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கோயிலில் குவியத் துவங்கினர். இதனால் கோயிலின் உட்பிரகாரம் மட்டுமின்றி நுழைவு வாசல் வரையில் பக்தர்கள் வரிசை காணப்பட்டது. மதியம் கோயில் நடை சாத்தும் வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரக வீதிகள் மற்றும் மாட வீதிகளில் வெளியூர் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் பாதுகாப்பு , போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.