ADDED : ஆக 18, 2026 09:22 PM
காரியாபட்டி, ஆக. 19-
மதுரை தூத்துக்குடி 4 வழிச் சாலையில் காரியாபட்டி கே. கரிசல்குளம் கண்மாய் அருகில் ஜூலை 21ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லாரிகளிலிருந்து முறையே 220, 360 லி., டீசல், ஆக. 2 ல் மண் அள்ளும் இயந்திரத்தில் 380 லி., டீசல் திருடப்பட்டது. வாடிப்பட்டி மேலக்காலை சேர்ந்த வினோத் 28, புகார் கொடுத்தார். காரியாபட்டி எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார்
விசாரித்ததில், மண்ணாடிமங்கலம் செல்லபாண்டி, உசிலம்பட்டி ஜெகதீஷ் ராஜா, டீசல் திருடி அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு விற்றது தெரிந்தது. செல்லப்பாண்டியிடம் ரூ. 30 ஆயிரம், ஜெகதீஷ் ராஜாவிடம் ரூ. 66 ஆயிரத்தை கைப்பற்றி, திருட்டுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். டீசல் வாங்கிய செந்தில்குமாரை தேடி வருகின்றனர். கரூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அவர்கள் மீது திருட்டு வழக்கு உள்ளன .
