/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆமை வேகத்தில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பணிகளால் சிரமம்
/
ஆமை வேகத்தில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பணிகளால் சிரமம்
ஆமை வேகத்தில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பணிகளால் சிரமம்
ஆமை வேகத்தில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பணிகளால் சிரமம்
ADDED : டிச 24, 2025 05:48 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் புறவழி சாலைகள் பல ஆண்டுகளாகியும் ஒரு பகுதி முடிவடைந்த நிலையில் மற்றொரு பகுதி முடிவு பெறாமல் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் மக்கள் நெரிசலில் சிக்கி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நகர் முழுவதும் குறுகலான ரோடுகள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு உள்ளிட்ட ரோடுகளில் அதிக போக்குவரத்து உள்ளது. காலை, மாலை நேரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரில் ரோடுகளை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு புறவழிச் சாலை அமைக்கும் பணி 2016ல் நெடுஞ்சாலை துறை ,சிறு துறைமுகங்கள் துறை முடிவு செய்து 66 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி 300 கோடியில் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் 2023 ல், ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அருப்புக்கோட்டை நகருக்குள் வராமல் பந்தல்குடியில் இருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் செல்ல முடியும். மதுரை- தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் இந்த புறவழிச் சாலையை பயன்படுத்தி செல்லலாம்.
அருப்புக்கோட்டை எல்லையில், விருதுநகர் -- அருப்புக்கோட்டை ரோடு வழியாக வரும் வாகனங்கள் நகருக்குள் வராமல் புறவழிச் சாலையை பயன்படுத்தி சுக்கிலத்தம் ரோடு வழியாக செல்லலாம். இந்த ரோடு முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதேபோன்று நகர் எல்லையில் இருந்து கோபாலபுரம் வழியாக சென்று மதுரை -- தூத்துக்குடி நான்கு வழி சாலை வழியாக செல்லலாம். ஆனால் கோபாலபுரத்துக்கு வழியாக செல்லும் புறவழிச் சாலை போடப்பட்டுள்ளது.
இடையில் ஒரு ரயில் பாதை இருப்பதால் மேம்பாலம் கட்டித் தான் செல்ல வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டும் மேம்பாலம் கட்டும் பணிகள் முடியவில்லை. 2023 ல் துவங்கப்பட்ட பணிகள் இன்று வரை முடியாமல் உள்ளது. மந்தகதியில் நடப்பதால், நகரில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது.
மதுஅபிராமி, உதவி பொறியாளர், நெடுஞ்சாலை துறை: ரயில்வே பாலத்திற்கான பில்லர் ஒரு பகுதியில் போடப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் பணி நடந்து வருகிறது. பில்லருக்கு மேல் வரும் கர்டர்கள் அரக்கோணத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 5 கர்டர்களில் 2 தயாராக உள்ளது. மற்றவை முடிந்தவுடன் ரயில்வே நிர்வாகம் அனுமதியுடன் பில்லர்களில் பொருத்தப்படும்.

