/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான சுகாதார நிலைய கட்டடங்களால் சிரமம்! இடியும் முன் தேவை சீரமைப்பு பணிகள்
/
சேதமான சுகாதார நிலைய கட்டடங்களால் சிரமம்! இடியும் முன் தேவை சீரமைப்பு பணிகள்
சேதமான சுகாதார நிலைய கட்டடங்களால் சிரமம்! இடியும் முன் தேவை சீரமைப்பு பணிகள்
சேதமான சுகாதார நிலைய கட்டடங்களால் சிரமம்! இடியும் முன் தேவை சீரமைப்பு பணிகள்
ADDED : மே 16, 2024 06:06 AM

விருதுநகர் மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவசேவைகளை வழங்குவதற்காக நகர், ஆரம்ப, துணை சுகாதாரநிலையங்கள் அந்தந்த பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டன. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 2 நகர, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 114 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நகர, 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது.
இங்கு கர்ப்பிணிகளுக்கு பிக்மி எண் கொடுக்கப்பட்டு முறையாக பரிசோதனைகளுக்கு வருகிறார்களா என செவிலியர்கள் தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவதிற்கு அதிக செலவாகும் என்பதால் ஊரகப்பகுதிகளில் உள்ளவர்களை நகர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதித்து நடக்கும் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஊரகப்பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இவற்றில் சில சுகாதார நிலையங்களில் கட்டடங்களை முறையாக பராமரிக்காததால் தரைதளங்கள் சேதமாகி பெயர்ந்து பள்ளங்களாக காணப்படுகிறது. மேலும் கூரை பூச்சுகள் பெயர்ந்து கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
இந்த கட்டடங்கள் கட்டப்பட்டு 10 ஆண்டுகளை கடந்தும் முறையாக பராமரிக்காததால் இது போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இது போன்ற துணை சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, வயிறு வலி, ரத்த அழுத்தம் ஆகிய உடல் உபாதைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இந்த பாதிப்புகள் தொடரும் சமயத்தில் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்படி மக்களுக்கு அத்தியாவசியமாக இருக்கும் சுகாதார நிலையங்களில் சேதமான கட்டடங்களை சீரமைக்காமல் இருப்பது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்யும் அதிகாரிகள், துணை சுகாதார நிலையங்களில் உள்ள சேதத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.