/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி - மதுரை மதிய நேர பஸ்கள் இல்லாததால் சிரமம்
/
காரியாபட்டி - மதுரை மதிய நேர பஸ்கள் இல்லாததால் சிரமம்
காரியாபட்டி - மதுரை மதிய நேர பஸ்கள் இல்லாததால் சிரமம்
காரியாபட்டி - மதுரை மதிய நேர பஸ்கள் இல்லாததால் சிரமம்
ADDED : டிச 26, 2025 05:55 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு மதியம் ஒரு மணி நேரத்திற்கு டவுன் பஸ்கள் இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நேரத்தை மாற்றி அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சென்னை, கோவை என பல்வேறு ஊர்களுக்கு காரியாபட்டி வந்து செல்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 10 நிமிடங்களுக்கு ஒரு டவுன் பஸ் இயங்கி வருகிறது. அப்படி இருந்தும் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் மதியம் 2:00 மணியிலிருந்து 3: 15 வரை டவுன் பஸ்கள் கிடையாது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
அது மட்டுமல்ல உரிய நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. 3:15 க்கு மேல் தொடர்ந்து ஒரே நேரத்தில் 4 டவுன் பஸ்கள் வருகின்றன. மொத்தமாக வருவதால் எந்த பஸ் முதலில் கிளம்பும் என தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். அது மட்டுமல்ல தொடர்ந்து 4 பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து செல்வதால் மீண்டும் சிறிது நேரம் இடைவெளி ஏற்படுகிறது. அப்போதும் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு மணி நேர இடைவெளியை தவிர்க்க, நேரத்தை மாற்றி அமைத்து, சீராக தொடர்ந்து டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

