/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் வசதியின்றி சிரமம்
/
ரோடு, வாறுகால் வசதியின்றி சிரமம்
ADDED : ஏப் 22, 2025 05:27 AM

சாத்துார்: தெருக்களில் சேதமடைந்த ரோடு ,கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி இன்றி உள்ளதால் ஒத்தையால் ஊராட்சியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒத்தையால் ஊராட்சியில் வடக்கு தெரு, நடுத்தெரு, மேலத்தெரு, இந்திரா காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. ஊராட்சியில் பிரதான தெருக்களில் ரோடு வசதி இல்லை.பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடு பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
முறையான வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பாதையில் தேங்கி நிற்கிறது. மேலும் வாறுகால் மீது கட்டப்பட்டுள்ளதால் துாய்மை பணியாளர்களால் துப்புரவு செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் ஊராட்சி பகுதியில் உள்ள கழிவு நீர் வாறுகால்கள் குப்பை குவிந்து சுகாதாரக் கேடாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் குடிநீர் சரிவர கிடைக்காததால் அவர்கள் வண்டியில் விற்பனைக்காக கொண்டு வரப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.