/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோப்பை சுற்றி அகழி வெட்டியும் யானைகளை தடுக்க முடியவில்லை
/
தோப்பை சுற்றி அகழி வெட்டியும் யானைகளை தடுக்க முடியவில்லை
தோப்பை சுற்றி அகழி வெட்டியும் யானைகளை தடுக்க முடியவில்லை
தோப்பை சுற்றி அகழி வெட்டியும் யானைகளை தடுக்க முடியவில்லை
ADDED : மே 15, 2025 12:35 AM

சேத்துார்; ராஜபாளையம் அருகே சேத்துார் உள்ளிட்ட மலையை ஒட்டிய விவசாய பகுதிகளில் தொடர்ந்து யானைகளால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வனத்துறையை எதிர்பாராமல் விவசாயிகளே தென்னந்தோப்புகளை சுற்றி அகழி வெட்டி வைத்தும் அவற்றைக் கடந்து வந்து சேதப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
சேத்துார் ஆற்றை ஒட்டிய வனப் பகுதிகளில் மா, தென்னை, கரும்பு, வாழை, பலா உள்ளிட்ட விளை பொருட்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகஇப்பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தோப்புகளில் புகுந்து விளை பொருட்களை மிகுந்த சேதத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.
தொடர்ந்து இவற்றை தடுக்க முடியாத சில விவசாயிகள் தங்கள் தோப்பினை சுற்றி யானைகள் கடந்து உள்ளே வர முடியாத வகையில் அகழிகளை வெட்டி பாதுகாத்து வந்தனர். இதையும் மீறி உட்புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி சென்றுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
விவசாயி தேவதாஸ்: பிலாவடி ஆறு, நச்சாடைப்பேரி கண்மாய், வாழவந்தான் கண்மாய் சுற்றியுள்ள விவசாய பகுதிகளில் மலை அடிவாரம் பதுங்கி உள்ள யானை கூட்டங்கள் பிரிந்து இரவு நேரங்களில் விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்தது.
இதனைத் தவிர்க்க ஆறு ஏக்கர் கொண்ட தென்னந்தோப்பு சுற்றி ஒரு ஆள் உயரத்திற்கு போதிய அகலத்துடன் அகழி தோண்டி வைத்திருந்தேன்.
இந்நிலையில் தற்போது இப்பகுதியில் குட்டியுடன் சுற்றிய யானை கூட்டம் இதில் மண்ணை சரித்து நுழைந்ததுடன் தென்னங்கன்று குருத்துகளை சேதப்படுத்தி கடந்து சென்றுள்ளது. இத்தனை பாதுகாப்பு செய்தும் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாததால் செய்வதறியாது தவிக்கிறோம். அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.