/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் டிஜிட்டல் பயிர் சர்வே
/
திருச்சுழியில் டிஜிட்டல் பயிர் சர்வே
ADDED : டிச 24, 2025 05:45 AM
திருச்சுழி: திருச்சுழி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது ராபி பருவத்திற்கு டிஜிட்டல் சர்வே பணி நடந்து வருகிறது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிக அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அலைபேசி செயலி மூலம் விளை நிலங்களில் ஜி.பி.எஸ்.ஐ., வைத்து செயல்படுத்துகின்றனர். இதன் மூலம் நில அமைவிடம், அதன் போட்டோ ஆகியவை துல்லியமாக பதிவேற்றப்படுகின்றன.
வேளாண்மை துறை திட்டங்களை செயல்படுத்துவதிலும் குறிப்பிட்ட நிலங்களில் உள்ள விவசாயிகள் என்ன பயிர் சாகுபடி செய்துள்ளனர் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் பாதிப்புகளை துல்லியமாக கணக்கீடு செய்வதற்கும், பயிர் கடன் வழங்குவதிலும் பயிர் காப்பீடு செய்வதிலும் எந்தெந்த பகுதிகள் தகுதியானவை என்பதை அறிய உதவும். நிலங்களின் வரையறைக்கு ஏற்ப உரம் பூச்சி மருந்து எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிவுறுத்த முடியும். டிஜிட்டல் சர்வே சர்வே பணி வேளாண்மை துறைக்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த டிஜிட்டல் பயிர் சர்வே செய்வதற்கு அலைபேசி வைத்துள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் வரவேற்கப்படுவதாக திருச்சுழி வேளாண்மை உதவி இயக்குனர் காயத்ரிதேவி அறிவிக்கிறார்.

