ADDED : ஜூன் 12, 2026 10:57 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:: அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு சார்பாக மாணவிகளுக்கு டிஜிட்டல் மோசடி குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிர சுரங்கள் வழங்கப்பட்டது.
மாணவிகளிடம் டிஜிட்டல் அரெஸ்ட், டிஜிட்டல் முறையில் கல்வி உதவித்தொகை மோசடி, பார்ட் டைம் வேலை வாங்கி தருவதாக மோசடி, வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் பாஸ்வேர்டு கேட்டு மோசடி, உறவினர் நண்பர் அவசர பண உதவி மோசடி உள்ளிட்ட பல டிஜிட்டல் மோசடிகள் குறித்து விளக்கப்பட்டது.
இது குறித்தான துண்டு பிரசுரங்களை சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ராமலிங்கம் மாணவிகளுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை மேரிலதா மற்றும் போலீசார் செய்தனர்.
