
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் வேலைவாய்ப்புத்துறை சார்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.
இதில் நாமக்கல் மாவட்டத்தைசேர்ந்த ஜெயம் பொறியியல், கட்டுமானம் நிறுவனம் பங்கேற்றது. மூன்று கட்டங்களாக நடந்த இவ்வளாகத் தேர்வில் மூன்று கட்டங்களாக எழுத்துத் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, எச்.ஆர்.,ன் நேர்காணல் என நடந்தது. 50 பேர் பங்கேற்றதில் பலர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி தர்மராஜ், ஜெயம் பொறியியல், கட்டுமானம் நிறுவன நிர்வாக பங்குதாரர் பிரகாஷ், திட்ட மேலாளர் மனோகரன், தளப் பொறியாளர்கள் ஆகாஷ், கணேஷ்குமார், விஷால் ஆகியோர் வேலையின் தன்மை பற்றி பேசினர். கல்லுாரி முதல்வர் லுயி பிராங்கோ, வேலைவாய்ப்பு துறை அதிகாரி முரளிராஜேந்திரன் பங்கேற்றனர்.

