ADDED : பிப் 14, 2026 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் நேரடி வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
வேலைவாய்ப்புத் துறை நிர்வாகி முரளி வரவேற்றார். கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி தர்மராஜ், சுயர்சாப்ட் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட், பாண்டிச்சேரிநிறுவனத்தின் மனிதவள மேலாளர் ரகுராமனை கவுரவித்தார்.
வைணவபெருமாள், கவின், சபரின் ரோஷரியோ ஆகியோர் நிர்வாகத்தின் சார்பாக பங்கேற்று வேலையின் தன்மை பற்றி விளக்கினர்.இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடத்தப்பட்டது.எழுத்து தேர்வு,தொழில்நுட்ப தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

