UPDATED : மே 10, 2026 10:06 PM
ADDED : மே 10, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பின் தங்கிய நிலையிலுள்ள மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கலெக்டர் சுகபுத்ராவின் சமூக பொறுப்பு நிதி, கனிம அறக்கட்டளை நிதியை பயன்படுத்தி திசை, உயிர் ஆகிய இரு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் 310 மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதியும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு 79 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
முதன்மை தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது தனியார் போட்டி தேர்வு மையத்தில் மேல்நிலை தேர்வுக்காக பயற்சிகள் பெற்று வருகின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது.
